செய்திகள்
யானை உயிரிழப்பு (கோப்புப்படம்)

காரையாறு அணை பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை

Published On 2021-06-09 09:11 GMT   |   Update On 2021-06-09 09:11 GMT
வனத்துறை இணை இயக்குனர் கவுதம் முன்னிலையில் அருவிபுரம் பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை:

காரையாறில் இருந்து பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள இஞ்சிகுழி பகுதியில் ஆற்றில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று பார்த்தபோது பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த யானை எவ்வாறு இறந்தது என்பதை அறிய நேற்று மாலை வனத்துறை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் தவறி விழுந்து யானை இறந்தது தெரிய வந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாபநாசம் அணையில் இதே போல் பெண் குட்டி யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. அதனை பிரேத பரிசோதனை செய்த பின்பு உடலில் பாதி பகுதியை முதலைகள் கடித்து சிதைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த குட்டி யானையின் தாய் தான் தற்போது பள்ளத்தாக்கில் சிக்கி இறந்த யானை என்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து வனத்துறை இணை இயக்குனர் கவுதம் முன்னிலையில் அருவிபுரம் பகுதியில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Tags:    

Similar News