லைஃப்ஸ்டைல்
செட்டிநாடு புளிக்குழம்பு

அருமையான செட்டிநாடு புளிக்குழம்பு

Published On 2020-03-21 08:32 GMT   |   Update On 2020-03-21 08:32 GMT
செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான புளிக்குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த புளிக்குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வடகம் - சிறிது
சோம்பு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி!!!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News