இந்தியா
திருப்பதி கோவில்

திருப்பதியில் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனம்?

Published On 2022-01-29 07:32 GMT   |   Update On 2022-01-29 08:50 GMT
கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன.

ஒரு நாளைக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 28 நாட்களுக்கு 3.36 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.

ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட அரை மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை 1.50 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

பிப்ரவரி மாதம் 28-ந்தேதி வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந் தேதி வரை மட்டுமே வெளியிடப்பட்டன.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக தரிசன டிக்கெட்டுகள் வழங்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.

அதனடிப்படையிலேயே இன்று ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பிப்ரவரி 15-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News