செய்திகள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு உண்டியல்கள் மூலம் ரூ. 24.34 லட்சம் வருமானம்

Published On 2021-08-18 04:04 GMT   |   Update On 2021-08-18 04:04 GMT
திருப்பரங்குன்றம் முருகன்கோவில் உள்ள உண்டியல்கள் வருமானமாக ரூ.24 லட்சத்து 34 ஆயிரத்து 386, தங்கம் 415 கிராம், வெள்ளி 1,650 கிராம் கிடைத்தது.
திருப்பரங்குன்றம் முருகன்கோவிலில் உள்ள உண்டியல்கள் நிரம்பியதும் மாதம்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த மாதத்திற்கான உண்டியல்கள் திறப்பு கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி மேற்பார்வையில் நேற்று நடைபெற்றது.

சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன்கோவில் உதவிஆணையர் கருணாகரன், தக்கார் பிரதிநிதிலட்சுமி மாலா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், ஸ்கந்தகுரு வித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரொக்கமாக ரூ.24 லட்சத்து 34 ஆயிரத்து 386, தங்கம் 415 கிராம், வெள்ளி 1,650 கிராம் கிடைத்தது.

நிகழ்ச்சியில் கோவில் சூப்பிரண்டுகள் பாலாஜி, பாலலட்சுமி, துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், பேஷ்கார் புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News