உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காரிமங்கலம் பகுதியில் பூக்கள் விலை உயர்வு

Published On 2022-01-13 08:52 GMT   |   Update On 2022-01-13 08:52 GMT
தர்மபுரி மாவட்டம் பூக்களின் வரத்து அதிகரிப்பதாலும், தொடர் பண்டிகை காலங்கள் வருவதாலும் பூக்களின் விலை உயர தொடங்கியுள்ளது.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அடிலம் பேகரஹள்ளி கோவிலூர் பெரியாம்பட்டி மாட்லாம்பட்டி திண்டல் மொட்டலூர் முக்குளம் மற்றும் பல்வேறு கிராமங்களில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த வாரத்தில் பூக்கள் விலை சரிவை சந்தித்து சம்பங்கி பூக்கள் ஏரி மற்றும் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டது. 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குண்டுமல்லி கிலோ ரூ.1,500-க்கும் காக்கடா பூ மற்றும் கனகாம்பரம் ரூ.1000-க்கும் அரளிப்பூ 250-க்கும் பன்னீர் ரோஸ் ரூ.100-க்கும் சாமந்தி ரூ.160-க்கும் விற்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை, தைப்பூசம் ஆகியவை வருவதால் பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என பூ வியாபாரி நந்திசிவம் என்பவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News