செய்திகள்
முகக்கவசம் அணியாமல் விதிமுறை மீறியவர்களிடம் அபராதம் வசூல்

பெங்களூருவில் முகக்கவசம் அணியாமல் விதிமுறை மீறியவர்களிடம் ரூ.4.37 கோடி அபராதம் வசூல்

Published On 2021-06-11 03:13 GMT   |   Update On 2021-06-11 03:13 GMT
பெங்களூரு நகர் முழுவதும் தினமும் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து போலீசார் அ்பராதம் வசூலித்து வருகின்றனர்.
பெங்களூரு :

பெங்களூருவில் ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் முகக்கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சியின் மார்ஷல்கள் மற்றும் போலீசாா் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, நகர் முழுவதும் தினமும் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து போலீசார் அ்பராதம் வசூலித்து வருகின்றனர். நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை வரை
முகக்கவசம்
அணியாத 985 நபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 250 அபராதம் வசூலித்திருந்தனர்.

அதுபோல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் 537 வழக்குகள் பதிவு செய்து, ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் வசூலித்திருந்தனர். பெங்களூருவில் ஒட்டு மெர்த்தமாக கொரோனா 2-வது அலையின் போது முகக்கவசம் அணியாத 1 லட்சத்து 47 ஆயிரத்து 290 நபர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 60 லட்சத்து 8 ஆயிரமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத காரணத்தால் 32 ஆயிரத்து 215 வழக்குகள் பதிவு செய்து ரூ.77 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.

ஒட்டு மொத்தமாக பெங்களூருவில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.4 கோடியே 37 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News