செய்திகள்
கப்பலில் இருந்து செலுத்தப்படும் பிரமோஸ் ஏவுகணை (கோப்பு படம்)

ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை

Published On 2020-10-18 08:47 GMT   |   Update On 2020-10-18 08:47 GMT
அரபிக்கடலில் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), ர‌ஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரபிக்கடலில், கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக டிஆர்டிஓ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்த டிஆர்டிஓ அதிகாரிகள், பிரமோஸ் ஏவுகணை திட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News