செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும், காரையும் படத்தில் காணலாம்.

குடவாசலில் காரில் கடத்தி வந்த 144 மதுபாட்டில்கள் பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2021-05-01 00:45 GMT   |   Update On 2021-05-01 00:45 GMT
குடவாசலில் காரில் கடத்தி வந்த 144 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குடவாசலில் நன்னிலம் சாலையில் வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் காரில் 3 அட்டை பெட்டியில் 144 மதுபாட்டில்கள் இருந்தன. பின்னர் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், குடவாசல் அருகில் உள்ள மூலங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த சாமிநாதன் மகன் மகேந்திரன் (வயது36). என்பதும், மருந்து விற்பனை பிரதிநிதியான இவர், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதால் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்து 144 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News