செய்திகள்
சித்தராமையா

ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாரா?: எடியூரப்பாவுக்கு சித்தராமையா சவால்

Published On 2021-02-06 03:31 GMT   |   Update On 2021-02-06 03:31 GMT
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக நடைபெறுவது தான். வேண்டுமானால் ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் தயாரா? என்று எடியூரப்பாவுக்கு சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதிலளித்தார். அப்போது எடியூரப்பா கூறியதாவது:-

எங்கள் அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குறை கூறுகிறார். சட்டசபையில் மஸ்கி, பசவ கல்யாண் உள்பட 3 தொகுதிகள் மற்றும் பெலகாவி மக்களவை தொகுதி காலியாக உள்ளன. அந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. இதை நீங்கள் (சித்தராமையா) எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

அப்போது சித்தராமையா, "இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக நடைபெறுவது தான். நான் முதல்-மந்திரியாக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே போல தான் இப்போது உங்கள் கட்சி வெற்றி பெறுகிறது. இடைத்தேர்தல்கள் எவ்வாறு நடக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். வேண்டுமானால் ஆட்சியை கலைத்துவிட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க நீங்கள் தயாரா?" என்றார்.
Tags:    

Similar News