ஆன்மிகம்
அழகர்கோவில் நூபுரகங்கையில் புனித நீராட அனுமதி கிடையாது

அழகர்கோவில் நூபுரகங்கையில் புனித நீராட அனுமதி கிடையாது

Published On 2020-09-07 06:16 GMT   |   Update On 2020-09-07 06:16 GMT
மதுரை அருகே உள்ள அழகர் கோவில் வளாகத்தில் கிடாய் வெட்டவும், நூபுரகங்கையில் புனித நீராடவும் அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை அருகே உள்ள அழகர் கோவில் வளாக பகுதிகளில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் நேர்த்திக்கடனுக்காக கிடாய் வெட்ட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலை உச்சியில் உள்ள புனித தீர்த்தமான நூபுரகங்கையில் நீராடவும் தடை நீடிக்கும்.

மேலும் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மலை உச்சிக்கு செல்வதற்கு அனுமதி இல்லை.

மலை உச்சியில் உள்ள 6-வது படைவீடு சோலைமலை முருகன் கோவிலுக்கு செல்வதற்கும், நூபுரகங்கையில் உள்ள ராக்காயி அம்மனை தரிசிப்பதற்கும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோவில் வாகனத்தில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று கோவில் நிர்வாக அதிகாரி அனிதா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News