செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

Published On 2021-04-22 05:18 GMT   |   Update On 2021-04-22 05:18 GMT
காவல் துறை அதிகாரியை வீடு புகுந்து தாக்கிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பலக்கட்டங்களில் பரபரப்பாக நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் தேர்தல் குறித்த விவாதங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரை இரண்டு நபர்கள் வீடு புகுந்து தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் தாக்குதலை நடத்தியவர்கள் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. பணியில் ஈடுபட்டு இருக்கும் காவல்துறை அதிகாரியை பாஜக தலைவர் ரின்கு வர்மா எவ்வாறு தாக்குகிறார் எனும் தலைப்பில் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது மேற்கு வங்கத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில், அந்த வீடியோ டெல்லி மாநிலத்தின் உட்டம் நகர் பகுதியில் எடுக்கப்பட்டது ஆகும். மேலும் வீடியோவில் தாக்கப்படும் போலீஸ் அதிகாரி டெல்லி மாநில காவல்துறை சீருடை அணிந்திருக்கிறார். 

போலீஸ் அதிகாரியை தாக்கிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோவுக்கும் மேற்கு வங்க தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 
Tags:    

Similar News