ஆன்மிகம்
பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் சங்காபிஷேகம்

பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் சங்காபிஷேகம்

Published On 2021-09-09 03:01 GMT   |   Update On 2021-09-09 03:01 GMT
பரமத்திவேலூரில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
பரமத்திவேலூரில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதே‌ போல்‌ இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு திங்கள்‌ மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மகா கணபதி யாகம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று மகா‌ கணபதி யாகம், வலம்புரி மற்றும் இடம்புரி சங்காபிஷேகமும் நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) பால்குட‌ மற்றும் திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிறப்பு அலங்காரம், ‌‌சுமங்கலி பூஜை, தீப‌ பூஜை, மகா ஆராதனை மற்றும் பிரசாதம் வழங்கும்‌ நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News