செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2019-11-14 18:09 GMT   |   Update On 2019-11-14 18:09 GMT
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளதால் மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (டிசம்பர்) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தேர்தலை நடத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தயாராகி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்துக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதற்கட்ட சரிபார்ப்பு பணி நடந்தது. அதன்பின்னர் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. அந்த பணிகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சி தேர்தல்) முருகேசன் ஆய்வு செய்தார்.

அப்போது எந்திரத்தில் உள்ள பட்டன்கள் சாியாக வேலை செய்கிறதா? என்று பாிசோதிக்கப்பட்டது. பின்னர் எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்ட நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
Tags:    

Similar News