லைஃப்ஸ்டைல்
மைசூர் சில்லி சிக்கன்

காரசாரமான மைசூர் சில்லி சிக்கன்

Published On 2020-07-15 10:33 GMT   |   Update On 2020-07-15 10:33 GMT
சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மைசூர் சில்லி சிக்கன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்,
தேவையான பொருட்கள்

சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - அரை கப்
வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

சிக்கனை துண்களாக வெட்டி நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

குடைமிளகாய், வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், வேர்க்கடலை, எள் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.

அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிக்கன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் அரைத்த பவுடர், கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.

சூப்பரான மைசூர் சில்லி சிக்கன் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News