தொழில்நுட்பம்
ரியல்மி எக்ஸ்

64 எம்.பி. கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2019-07-07 11:22 GMT   |   Update On 2019-07-07 11:22 GMT
ரியல்மி நிறுவனத்தின் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



ரியல்மி பிராண்டின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இது பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மியின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனுடன் என்ட்ரி-லெவல் அல்லது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

அதன்படி ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 3 லைட் என்ற பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதுவரை புதிய ரியல்மி 3 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

எனினும், இதன் விலை இந்தியாவில் ரியல்மி 3 மாடலை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்போவதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்திருந்தார்.



அந்த வகையில் ரியல்மி 3 லைட் ஸ்மார்ட்போன் 64 எம்.பி. கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி ரியல்மி தரப்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

பெசல் லெஸ் டிஸ்ப்ளே, பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மியின் முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி எக்ஸ் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இதில் 6.53 இன்ச் OLED FHD பிளஸ் ரெசல்யூஷன் டிஸ்ப்ளஏ மற்றும் 2.5D வளைந்த டெம்பர்டு கிளாஸ் வழங்கப்படுகிறது.

இத்துடன் டூயல் பிரைமரி கேமரா: 48 எம்.பி. + 5 எம்.பி. சென்சார்களும், முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது. இது 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் யு.எஸ்.பி. டைப்-சி வசதி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News