செய்திகள்
நகை கொள்ளை

கோவையில் பெண் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை

Published On 2021-03-24 09:36 GMT   |   Update On 2021-03-24 09:36 GMT
கோவையில் பெண் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீளமேடு:

கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி. நகரை சேர்ந்தவர் கோகிலா (வயது 45). என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு பள்ளி செல்லும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கோகிலா வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த 22-ந்தேதி ஊட்டிக்கு சென்றார். இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து கோகிலா அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். மேலும் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பெண் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News