ஆன்மிகம்
அலிபிரி நடைபாதை

திருப்பதி: அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-10-01 04:04 GMT   |   Update On 2021-10-01 04:04 GMT
வருகிற 7-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால் அன்று முதல் அலிபிரி நடைபாதையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்வார்கள். இந்த நடைபாதையின் மேற்கூரைகள் பழுதடைந்திருந்ததால் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால் கடந்த சில மாதங்களாக அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தற்போது மேற்கூரை சீரமைப்பு பணிகள் முடிவந்துள்ளது. இதனை தேவஸ்தான அதிகாரி கே.எஸ்.ஜெவஹர் ரெட்டி பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது கூடுதல் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி உடனிருந்தார்.

ஆய்வின்போது ஜவஹர் ரெட்டி கூறியதாவது:-

அலிபிரி முதல் திருமலை வரையிலான நடைபாதையின் கூரை அமைக்கும் பணிகள் நன்கொடையளர்களின் உதவியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் நடைபாதையில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இருக்கும். நடைபாதையில் பக்தர்களைஅனுமதித்த பிறகும், வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்த தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் வருகிற 7-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால் அன்று முதல் அலிபிரி நடைபாதையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது தேவஸ்தான அதிகாரிகள் கோபிநாத், நாகேஸ்வர ராவ், ஜெகதீஸ்வர் ரெட்டி, மல்லிகார்ஜூனா, சுகாதாரஅலுவலர் தேவி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News