செய்திகள்
கோப்புபடம்

அய்யம்பாளையம் பகுதியில் கால்வாய் இல்லாததால் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Published On 2021-09-15 09:24 GMT   |   Update On 2021-09-15 09:24 GMT
கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் காலனி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

மனுவில் கூறியிருப்பதாவது:

கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் காலனி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் இங்கு கடந்த பல ஆண்டுகளாகவே முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளோம்.

இந்த நிலையில் அய்யம்பாளையம் கிழக்குப் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கழிவுநீர் கால்வாய் அமைத்து அதனை ஏற்கனவே கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில் கொண்டு வந்து இணைக்கும்படி கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. 

இதனால் மேலும் கழிவுநீர் அந்தப் பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு உருவாகும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை மாற்றி அமைக்கவும், ஏற்கனவே தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News