லைஃப்ஸ்டைல்
பதவிக்கு தடையாகும் `பாலினம்'

பதவிக்கு தடையாகும் பாலினம்

Published On 2021-03-31 03:28 GMT   |   Update On 2021-03-31 03:28 GMT
நீண்டகாலமாக தொடர்ந்து வரும் பிரச்சினை என்றபோதிலும் கொரோனா தொற்று பரவல் சமயத்தில் 10-ல் 9 பெண்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை சார்ந்த விஷயத்தில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
நமது நாட்டில் பணிபுரியும் பெண்களில் 85 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறும் விஷயத்தில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பாலின பாகுபாடு காரணமாக புறக்கணிக்கப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இது நீண்டகாலமாக தொடர்ந்து வரும் பிரச்சினை என்றபோதிலும் கொரோனா தொற்று பரவல் சமயத்தில் 10-ல் 9 பெண்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை சார்ந்த விஷயத்தில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

அலுவலக வேலையில் பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய பாலின பாகுபாடு பெண்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவில் 85 சதவீத பெண்கள் பாலின பாகுபாடு காரணமாக சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வை பெற முடிவதில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த அளவு 60 சதவீதமாக உள்ளது.

சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் பெண் களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டிருக்கிறது. 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து 2,285 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

சர்வேயில் பங்கேற்றவர்களில் 66 சதவீதம் பேர் போதிய வழிகாட்டுதல்கள் கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியிருக் கிறார்கள். 70 சதவீதம் பேர் தொழில் வேலைவாய்ப்புகளுக்கு முன்னால் குடும்ப பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் பெண்கள் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக 22 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பாலின சமத்துவத்தில் பெற்றோர் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் வேதனையுடன் கூறுகிறார்கள்.

வாய்ப்புகள் தேடிவந்தாலும் அதனை பெறுவதற்கு பாலினம் தடையாக இருப்பதாக 50 சதவீத பெண்கள் கூறி இருக்கிறார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பாலினம் முக்கியமானது என்று 63 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 37 சதவீத பெண்கள் ஆண்களை விட குறைவான ஊதியம் பெறுவதும் சர்வேயில் தெரியவந்திருக்கிறது.
Tags:    

Similar News