செய்திகள்
மழை

தென்காசி மாவட்ட அணை பகுதிகளில் லேசான மழை

Published On 2021-09-09 10:05 GMT   |   Update On 2021-09-09 10:05 GMT
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது.
நெல்லை:

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளான அடவிநயினார், குண்டாறு அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

நேற்றும் 2 அணை பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இரு அணைகளிலும் தலா 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மிகச்சிறிய அணையான குண்டாறு அணை 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

இதனால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 123.50 அடி நீர் இருப்பு உள்ளது. இதேபோல் கடனா அணையில் 67.50 அடியும், ராமநதியில் 66.50 அடியும் நீர் இருப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Tags:    

Similar News