செய்திகள்
ராகுல் காந்தி

இந்த விஷயத்திலும் எனது எச்சரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கிறது -ராகுல் காந்தி அதிருப்தி

Published On 2020-07-24 12:07 GMT   |   Update On 2020-07-24 12:07 GMT
கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் தொடர்ந்து எச்சரித்து வந்ததாகவும், ஆனால் மத்திய அரசு கேட்கவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:

சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குறை கூறி வருகிறார். 

இது தொடர்பாக அவர் ஏற்கனவே 2 வீடியோக்களை வெளியிட்டார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாரதீய ஜனதா தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். இதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் (மத்திய அரசு) கேட்காமல் நிராகரித்துவிட்டார்கள், பேரழிவு ஏற்பட்டது. இப்போது சீனா குறித்தும் எச்சரித்து வருகிறேன்;  இதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News