உள்ளூர் செய்திகள்
த.சோழன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீயணைப்பு வீரர்

ஜெயங்கொண்டத்தில் செவிலியர்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-05-07 10:14 GMT   |   Update On 2022-05-07 10:14 GMT
ஜெயங்கொண்டம் த.சோழன்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ெஜயங்கொண்டம் அருகேயுள்ள த.சோழன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணி புரியும் மருத்துவர்கள்,


செவிலியர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் வீரர்கள் கலந்து கொண்டு, தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.

கட்டட இடிப்பாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, விபத்தில் காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் இருப்பவரை எப்படி தூக்குவது,

காப்பாற்றுவது, தீப்பற்றினால் அதனை எவ்வாறு அனைப்பது உள்ளிட்டவைகள் பற்றி செயல்விளக்கத்துடன் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

Tags:    

Similar News