செய்திகள்
சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா

Published On 2021-02-28 08:02 GMT   |   Update On 2021-02-28 08:02 GMT
புதுச்சேரியில் உள்துறை மந்திரி அமித் ஷா பிரசார பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் நாராயணசாமி  தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டதால், முதல்வர் நாராயணசாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படடது. உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காரைக்காலில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் முன்னிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் பாஜகவில் இணைந்தார். 

அதன்பின்னர் சபாநாயகர் சிவக்கொழுந்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பி உள்ளார். 
Tags:    

Similar News