செய்திகள்
ஆர்யன் கான்

போதைப்பொருள் வழக்கு- ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் மறுப்பு

Published On 2021-10-08 12:01 GMT   |   Update On 2021-10-08 12:01 GMT
சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை:

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

தேசிய பொதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்றுடன் நான்கு நாட்கள் விசாரணை முடிந்ததும் ஆர்யன் கான் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், என்.சி.பி. காவலை நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் என்சிபி காவலில் அனுப்ப நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. விசாரணைக்கு போதுமான நாட்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறி, ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.
 
இதற்கிடையில் ஜாமீன் வழங்க கோரி ஆர்யன் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. எனவே, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுகிறார். 
Tags:    

Similar News