ஆன்மிகம்
மாரியம்மன்

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவில் தீமிதி விழா ரத்து

Published On 2021-04-21 07:38 GMT   |   Update On 2021-04-21 07:38 GMT
நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டும் 2-வது முறையாக தீமிதி விழா, தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் நேர்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தீமிதி விழா, தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த கோவிலில் தீமிதி விழா, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் வருகிற 27-ந் தேதி மாரியம்மன் கோவில் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த மாதம் 12-ந் தேதி தீமிதி விழா நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்த ஆண்டும் 2-வது முறையாக தீமிதி விழா, தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் நேர்த்திக்கடன் செலுத்த இருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News