செய்திகள்
ஹாரி- மேகன் தம்பதி

இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை: டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளது

Published On 2021-06-06 16:58 GMT   |   Update On 2021-06-06 17:34 GMT
இங்கிலாந்து அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன், அரச குடும்பத்தில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி இளவரசர் ஹாரி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சகோதரர் வில்லியம் உடன் இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தார்.

அதன்பின் அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி மனைவியுடன் அமெரிக்கா சென்றுவிட்டார். ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிசபெத் ராணியின் (ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட்பேட்டன்-வின்ட்சர்) பெயரை சூட்டியிருந்தது.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி (நேற்றுமுன்தினம்) இந்த தம்பதிக்கு கலிபோர்னியாவில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஹாரி,  மறைந்த தனது தாயார் டயானாவின் (லிலிபெட் லிலி டயானா) பெயரை சூட்டியுள்ளார்.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவர்களுடைய பத்திரிகை செயலாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News