செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-08-20 04:17 GMT   |   Update On 2021-08-20 04:17 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது.

ஒகேனக்கலில் 7 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாக்கு 4 ஆயிரத்து 693 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5,352 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கனஅடியும், கால்வாயில் 700 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 67.24 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 66.45 அடியானது.

Tags:    

Similar News