ஆன்மிகம்
நவரத்தினங்களாலான செங்கோல் சாற்றப்பட்டு பட்டாபிஷேகம் நடைபெற்றபோது எடுத்த படம்.

குன்றத்து குமரனுக்கு இன்று திருக்கல்யாணம்

Published On 2021-03-31 02:53 GMT   |   Update On 2021-03-31 02:53 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி திருவிழாவில் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(31-ந்தேதி) பகல் 11.50 மணி அளவில் கோவிலுக்குள் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக பல்வேறு வாகனங்களில் தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த28-ந்தேதி பங்குனி உத்திரமும் 29-ந்தேதி சூரசம்கார லீலையும ்நடைபெற்றது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று கோவிலுக்குள் உள்ள ஆறுகால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு கிரீடம் சூட்டி, சேவல் கொடி சாற்றப்பட்டு நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்க பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இத்தகைய கண்கொள்ளாக்காட்சியை கண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்

திருவிழாவில் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(31-ந்தேதி) பகல் 11.50 மணி அளவில் கோவிலுக்குள் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடக்கிறது. இதனையொட்டி மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சொக்கநாதர் எழுந்தருளுகின்றனர். ்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை 1-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News