செய்திகள்
ஜெகதீசன்

ஜெகதீசன் அபார ஆட்டம்... நெல்லை அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2021-07-24 12:08 GMT   |   Update On 2021-07-24 14:54 GMT
அதிரடியாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்களாக கேப்டன் கவுசிக், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் களமிறங்கினர். கேப்டன் கவுசிக் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

ஆனால், மற்றொரு துவக்க வீரரான ஜெகதீசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.

மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தபோதும், நங்கூரம் போல் நிலைத்து நின்ற ஜெகதீசன், நெல்லை பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.



20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், மோகன் அபினவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.
Tags:    

Similar News