உள்ளூர் செய்திகள்
கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-04-16 09:44 GMT   |   Update On 2022-04-16 09:44 GMT
கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
புதுக்கோட்டை:


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி சூத்தியன்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில், ஸ்ரீ வள்ளி, தெய்வானை உடனுறை கல்யாண சுப்பிரமணியர்ஸ் முனீஸ்வரர் துர்க்கையம்மன் மற்றும் நவக்கிரகம் ஆகிய தெய்வங்களுக்கு ஜீர்ணோ த்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

யாக சாலையில் மஹா கணபதி ஹோமம் வைத்து பூஜை செய்யப் பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சும ந்துகொண்டு கோவிலை வலம் வந்தனர். இதையடுத்து கற்பக வினயாக மூலஸ்தான விமான கலசம் மற்றும் பரி வார தெய்வங்களின் மூலஸ்தான விமான கலசத்திற்கு பட்டாச்சாரியார் கள் வேதமந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்த ர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களு க்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷே கத்திற்கான ஏற்பாடுக ளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொ துமக்கள் திரளானோர் விழாவில் கலந்துகொண்டனர்.ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும்  அரசியல் பிரமுகர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News