செய்திகள்
ஜோ ரூட்

ஒரே தொடரில் மூன்று முறை டக்: மோசமான சாதனையை பதிவு செய்தார் ஜோ ரூட்

Published On 2019-09-08 11:01 GMT   |   Update On 2019-09-08 11:01 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் மூன்று முறை டக் அவுட்டாகிய ஒரே கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

கடுமையான இலக்கை எட்ட வேண்டிய நிலையோடு இங்கிலாந்தின் ஜோ பர்ன்ஸ், டென்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். 3-வது பந்தில் பேர்ன்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்த பந்தில் ஜோ ரூட் ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார்.



இந்தத் தொடரில் ஜோ ரூட்டின் 3-வது டக்அவுட் இதுவாகும். இதன்மூலம் ஆஷஸ் தொடரில் மூன்று முறை டக்அவுட் ஆன இங்கிலாந்து கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.

இதற்கு முன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் முதல் பந்திலும், ஹெட்டிங்லே டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2 பந்துகளை சந்தித்த நிழைலயில் டக்அவுட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News