சமையல்
ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்

குட்டீஸ் ரெசிபி: ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்

Published On 2022-02-28 05:09 GMT   |   Update On 2022-02-28 05:09 GMT
இத்தாலி நாட்டின் காலை உணவுகளில் இந்த ‘ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்' முக்கிய இடம் பிடிப்பதுண்டு. இதை தயாரிப்பதும் எளிது என்பதால், இதை இத்தாலியர்கள் விரும்பி சுவைக்கிறார்கள்.
இத்தாலிய உணவில் மிக எளிமையானதும், ரொம்ப சுவையானதுமான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் பற்றிதான் குட்டீஸ் ரெசிபியில் பார்க்க இருக்கிறோம். இத்தாலி நாட்டின் காலை உணவுகளில் இந்த ‘ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ்' முக்கிய இடம் பிடிப்பதுண்டு. இதை தயாரிப்பதும் எளிது என்பதால், இதை இத்தாலியர்கள் விரும்பி சுவைக்கிறார்கள். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:-

1. ஸ்ட்ராபெர்ரி

2. பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒருவகை பிஸ்கட்தான்)

3. பிரெஷ் கிரீம்

செய்முறை

ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஸ்ட்ராபெர்ரியை பொடியாக நறுக்கி கொள்ளலாம்.

பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். ‘ஜாம்' மாதிரியில் தயாராகி இருக்கும் கிரீமை, பிஸ்கட்டில் தடவி, அதன் மீது மற்றொரு பிஸ்கெட்டை ஒட்டினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் ரெடி.

கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சுலபமாக தெரிந்தாலும், இது குட்டி குழந்தைகளுக்கான ‘டாஸ்க்' என்பதை மறந்துவிடாதீர்கள்.
Tags:    

Similar News