இந்தியா
பினராயி விஜயன்

இவர்களுக்கு கொரோனா வந்தால் இலவச சிகிச்சை கிடையாது: பினராயி விஜயன்

Published On 2021-12-01 02:31 GMT   |   Update On 2021-12-01 02:31 GMT
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
திருவனந்தபுரம்

நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. ஒரே நாளில் மட்டும் நேற்று 4 ஆயிரத்து 723 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு 19 பேர் இறந்தனர். 5 ஆயிரத்து 370 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாரத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு அரசின் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News