இந்தியா
கைதி

டெல்லி சிறைகளில் 99 கைதிகளுக்கு கொரோனா: 88 ஊழியர்களுக்கும் தொற்று

Published On 2022-01-17 01:46 GMT   |   Update On 2022-01-17 01:46 GMT
கொரோனா தாக்கியவர்களில் யாருக்கும் தீவிர தொற்று இல்லை எனவும், பெரும்பாலான நோயாளிகளை சிறை டாக்டர்களே கவனித்து வருவதாகவும் சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் தெரிவித்தார்.
புதுடெல்லி :

டெல்லி சிறைத்துறையின் கீழ் திகார், ரோகிணி, மண்டோலி ஆகிய 3 முக்கிய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் கடந்த 14-ந்தேதி வரை 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்தவகையில் 99 கைதிகள் மற்றும் 88 ஊழியர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 17 கைதிகளும், 14 ஊழியர்களும் குணமடைந்து உள்ளனர்.

கொரோனா தாக்கியவர்களில் யாருக்கும் தீவிர தொற்று இல்லை எனவும், பெரும்பாலான நோயாளிகளை சிறை டாக்டர்களே கவனித்து வருவதாகவும் சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் தெரிவித்தார்.

இதற்காக சிறைகளில் உள்ள மருந்தகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், லேசான அறிகுறி கொண்டவர்களுக்காக பல தனிமைப்படுத்தும் அறைகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News