ஆட்டோமொபைல்
கேஎம் 3000

இரு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்த கபிரா மொபிலிட்டி

Published On 2021-02-17 09:30 GMT   |   Update On 2021-02-17 09:30 GMT
கபிரா மொபிலிட்டி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.


கோவாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் கபிரா மொபிலிட்டி இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை கேஎம் 3000 மற்றும் கேஎம் 4000 என அழைக்கப்படுகின்றன.

இதில் கவாசகி நின்ஜா 300 போன்றே காட்சியளிக்கும் கேஎம் 3000 மாடல் விலை ரூ. 1,26,990 என்றும் இசட்1000 தோற்றம் கொண்டிருக்கும் கேஎம் 4000 மாடல் விலை ரூ. 1,36,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் முறையே 6kW மற்றும் kW மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மோட்டார்கள் 4.0 kWh மற்றும் 4.4 kWh பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த பேட்டரிகளை பூஸ்ட் சார்ஜ் மூலம் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். இகோ சார்ஜ் பயன்படுத்தும் பட்சத்தில் 6 மணி 30 நிமிடங்கள் ஆகும்.



கேஎம் 3000 மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 முதல் 120 கிலோமீட்டர் வரை செல்லும். கேம் 4000 மாடல் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 முதல் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

இரு மாடல்களிலும் ப்ளூடூத் சார்ந்து இயங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பகுதிகளை சேர்ந்த 27 விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News