ஆட்டோமொபைல்
ஆடி இ டிரான்

ஆடி இ டிரான் சர்வீஸ் மற்றும் வாரண்டி விவரங்கள் வெளியீடு

Published On 2021-07-15 06:54 GMT   |   Update On 2021-07-15 06:54 GMT
இ டிரான் வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆடி பல்வேறு விவரங்களை வெளியிட்டு உள்ளது.

ஆடி நிறுவனம் தனது இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு பிந்தைய சேவை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இதில் சர்வீஸ் திட்டங்கள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் பைபேக் சலுகை உள்ளிட்டவை அடங்கும்.

இந்தியாவில் புதிய ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் மாடல் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் விவரங்கள் எலெக்ட்ரிக் வாகனம் பற்றி மக்களிடையே இருக்கும் சந்தேகங்களை விளக்கும் வகையில் உள்ளது. புதிய இ டிரான் மாடலுக்கு ஆடி இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.

இதில் உள்ள பேட்டரிக்கு எட்டு ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இவைதவிர வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் வாரண்டியை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் கூடுதல் தொகை செலுத்தி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு வாரண்டியை நீட்டித்துக் கொள்ளலாம்.



சர்வீசை பொருத்தவரை இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் சரியான கால இடைவெளியில் சர்வீஸ் செய்து கொள்ளலாம். சில திட்டங்களில் நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றன.

இத்துடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி ஐந்து ஆண்டுகளுக்கு ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் சேவையை ஆடி வழங்குகிறது. மேலும் காரை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் ஆடியிடம் விற்பனை செய்யும் பைபேக் சலுகை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News