இஸ்லாம்
காயல்பட்டினம் புகாரி ஷரீப் சபை

காயல்பட்டினம் புகாரி ஷரீப் சபை விழா நாளை அபூர்வ பிரார்த்தனை நடக்கிறது

Published On 2022-03-02 03:37 GMT   |   Update On 2022-03-02 03:37 GMT
காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையின் 95-ம் ஆண்டு விழாவில் அபூர்வ துஆ பிரார்த்தனை நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.
காயல்பட்டினத்தில் பழமைவாய்ந்த மஜ்லிசுல் புகாரி ஷரீப் சபையின் 95-ம் ஆண்டு விழாவில் அபூர்வ துஆ பிரார்த்தனை நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

விழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சொற்பொழிவு, மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

நாளை காலை 9 மணிக்கு அபூர்வ துஆ பிரார்த்தனை நடைபெறுகிறது. உலக அமைதிக்காகவும், மக்கள் ஒற்றுமையாக வாழவும், நல்ல மழை பெய்ய வேண்டியும், நோய் நொடிகள் அகன்று போகவும், கொரோனா மற்றும் ஒமைக்ரான் போன்ற கொடிய நோய்கள் உலகத்தை விட்டு அகன்று போவதற்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை நேர்ச்சை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News