செய்திகள்
பேட் கம்மின்ஸ்

சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்: பேட் கம்மின்ஸ்

Published On 2020-01-10 08:39 GMT   |   Update On 2020-01-10 08:39 GMT
உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி 14-ந்தேதி நடக்கிறது.

உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் அணியில் உள்ளார். இருந்தாலும் இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப இரண்டு முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்துள்ளது.

இந்நிலையில் இந்திய தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘உலகில் மற்ற இடங்களில் விளையாடுவதை விட சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் ஆட்டத்தின் மிகப்பெரிய பகுதியாக இருப்பார்கள். ஆனால், ஒருநாள் சர்வதேச போட்டியில் மிகப்பெரிய அளவில்  பந்து திரும்பும் அளவிற்கு ஆடுகளம் மாறுவது  அரிதானது.

கடந்த தொடரின்போது நாங்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதாக கருதுகிறேன். இந்தியாவும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மிடில் ஓவர்கள் அவர்கள் பந்து வீசுவது முக்கியமானது’’ என்றார்.

ஆஸ்திரேலியா ஆஷ்டோன் அகர் மற்றும் ஆடம் ஜம்பா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் வந்துள்ளது.
Tags:    

Similar News