உள்ளூர் செய்திகள்
போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது- போலீஸ் அதிகாரி அறிவுரை

Published On 2022-05-07 07:40 GMT   |   Update On 2022-05-07 07:40 GMT
இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர் என்று விபத்து குறித்து ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக துணை போலீஸ் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலை வகித்தார். துணை போலீஸ் கண்காணிப்பாளர் சாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது. இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்துள்ளனர் என்று விபத்து குறித்து ஆய்வு மூலம் தெரிகிறது.

இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் உயிர்க்கவசமாகும். தலைக்கவசம் அணிந்து சென்றால் அபராதத்தை தவிர்க்கலாம். இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர் தலைக்கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.

காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சாலை விதிகளை மதித்து விபத்துக்களை தடுக்க வேண்டும். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பிரதாபன் மற்றும் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News