செய்திகள்
வாக்காளர் பட்டியல் (கோப்புப்படம்)

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 லட்சத்து 91,536 வாக்காளர்கள்

Published On 2019-12-23 10:20 GMT   |   Update On 2019-12-23 10:20 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 79,699 ஆண்கள், 10 லட்சத்து 11,747 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 90 பேர் உள்பட மொத்தம் 19 லட்சத்து 91 ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

இதில் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 79,699 ஆண்கள், 10 லட்சத்து 11,747 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 90 பேர் உள்பட மொத்தம் 19 லட்சத்து 91 ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த பட்டியலில் 6,931 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இருமுறை பதிவு அடிப்படையில் 4,833 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குசாவடி மையங்கள் சப்-கலெக்டர், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் https://www.elections.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள் இதனை பார்த்து விவரம் தெரிந்து கொள்ளலாம். புதியதாக பெயர் சேர்க்க, சுருக்கம் திருத்தம் செய்ய இன்று முதல் ஜனவரி மாதம் 22-ந் தேதி வரை படிவங்கள் வழங்கப்படுகிறது.

பெயர் சேர்க்க படிவம்-6, நீக்க படிவம்-7, திருத்தம் செய்ய படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம்-6ஏ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் இ.சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை நகலை பெற்று கொள்ளலாம்.

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-


Tags:    

Similar News