தொழில்நுட்பம்

சியோமியின் இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா இப்படித் தான் இயங்குமாம்

Published On 2019-06-06 09:20 GMT   |   Update On 2019-06-06 09:20 GMT
சியோமி நிறுவனம் தனது இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா அமைப்பு எவ்வாறு இயங்கும் என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறது.



சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நாட்ச் மற்றும் பாப்-அப் கேமராவுக்கு மாற்றாக டிஸ்ப்ளேவினுள் கேமராவை பொருத்தும் வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் சியோமி நிறுவனம் இன்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் இயங்கும் படியான ப்ரோடோடைப் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனமும் இன்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.

இருநிறுவனங்கள் ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவது தொழில்நுட்ப சந்தையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை சியோமி மற்றும் ஒப்போ என இரண்டு நிறுவனங்களில் யார் முதலில் அறிமுகம் செய்வார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.



சியோமியின் டீசரை அந்நிறுவன மூத்த துணை தலைவர் வாங் சியாங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இத்துடன் இன்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பதை விளக்கும் நான்கு புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார்.

புதிய தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்த சியோமி நிறுவனம் கஸ்டம் டிஸ்ப்ளே ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவின் சிறிய பகுதியில் டிரான்ஸ்பேரண்ட் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்த அமைப்பு விசேஷ குறைந்த பிராகசமுள்ள கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.
 


ஸ்மார்ட்போன் கேமரா மோடில் இல்லாத போது, டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளே வழக்கமான டிஸ்ப்ளே போன்று இயங்கும். கேமராவிற்கு தேவையான வெளிச்சத்தை வழங்க டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளேவில் ஆர்கானிக் லுமினிசன்ட்டை சுற்றி டிரான்ஸ்பேரண்ட் கேத்தோடு மற்றும் டிரான்ஸ்பேரண்ட் அனோட் பயன்படுத்தப்படுகிறது. 

டிஸ்ப்ளேவினுள் 20 எம்.பி. கேமரா சென்சார் பொருத்துவதற்கான பணிகளில் சியோமி ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சென்சார் போதுமான வெளிச்சத்தை பெற ஏதுவாக, அந்நிறுவனம் டிஸ்ப்ளே-எம்பெட்டெட் கேமரா அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இது வழக்கமான கேமரா லென்ஸ் போன்றே இயங்கும். 
Tags:    

Similar News