உள்ளூர் செய்திகள்
.

சேலம், கோவை வழியாக திருவனந்தபுரம்-மும்பை ரெயில் மீண்டும் இயக்கம்

Published On 2022-04-16 08:01 GMT   |   Update On 2022-04-16 08:01 GMT
சேலம், கோவை வழியாக செல்லும் திருவனந்தபுரம் மும்பை ரெயில் மீண்டும் இயக்கி வருகிறது.
சேலம்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்தபோது கொரோனா பரவலை தடுப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் ரெயில்களை தற்காலிகமாக ரத்து செய்திருந்தது, 

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து ரத்து செய்யப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்கி வருகிறது. 

அந்த வகையில் திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக மும்பை செல்லும் திருவனந்தபுரம்  மும்பை சிஎஸ்எம்டி வாராந்திர அதிவிரைவு ரெயில் (16332) மீண்டும் இயக்கப்படுகிறது. அதன்படி வருகிற 23-ந் தேதி முதல் சனிக்கிழமைகளில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு வர்கலா, சிவகிரி, கொல்லம், காயன்குளம்,ஹரிபாத், ஆலப்புழா, சேர்த்தலா, எர்ணாகுளம், அலுவா, திருச்சூர், ஒட்டபாளையம், பாலக்காடு, போத்தனூர், கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 4.07 மணிக்கு சேலம் வந்தடையும்.

பின்னர் இங்கிருந்து 4.10 மணிக்கு புறப்பட்டு திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், இந்துப்பூர், தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல் அடோனி, மந்த்ராலயம், ரெய்ச்சூர், சோலாப்பூர், தானே, தாதர் வழியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு மும்பை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் மும்பை சி.எஸ்.எம்.டி.திருவனந்தபுரம் வாராந்திர விரைவு ரெயில் (16331) வருகிற 24-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை ரெயில் நிலையத்திலிருந்து இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு தாதர், குண்டக்கல், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக திங்கட்கிழமை இரவு 8.42 மணிக்கு சேலம் வந்தடையும்.

பின்னர் இங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, கோவை , போத்தனூர் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News