செய்திகள்
யூசோயுபா மவுகோகோ

ஜெர்மன் லீக்கில் 16 வயதில் விளையாடி சாதனைப்படைத்த கால்பந்து வீரர்

Published On 2020-11-22 12:50 GMT   |   Update On 2020-11-22 12:50 GMT
கேமரூன் நாட்டில் பிறந்து ஜெர்மனில் வசித்து வரும் யூசோயுபா மவுகோகோ 16 வயதில் ஜெர்மனின் பண்டேஸ்லிகா கால்பந்தில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார்.
ஜெர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் பண்டேஸ்லிகா. இந்த லீக்கில் பொருஸ்சியா டார்ட்மண்ட் முக்கியமான அணிகளில் ஒன்று. இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பொருஸ்சியா டார்ட்மண்ட் ஹெர்தா அணியை எதிர்கொண்டது.

இதில் பொருஸ்சியா டார்ட்மண்ட் அணி 5-2 என வெற்றி பெற்றது. அந்த அணியின் எர்லிங் ஹாலண்ட் நான்கு கோல்கள் அடித்தார். ஹாலண்ட் 85-வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்குப் பதிலாக யூசோயுபா மவுகோகோ களம் இறங்கினார்.

இவருக்கு 16 வயதே ஆகிறது. இதன்மூலம் பண்டேஸ்லிகா லீக் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை யூசோயுபா மவுகோகோ பெற்றுள்ளார். இதற்கு முன் பிவிபி அணியின் நுரி சாஹின் 17 வயது பிறந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அந்த சாதனையை தற்போது யூசோயுபா மவுகோகோ முறியடித்துள்ளார்.

பொருஸ்சியா அணியின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்து 88 ஆட்டங்களில் 141 கோல்கள் அடித்துள்ளார். கடைசி நான்கு போட்டிகளில் மட்டும் 13 கோல்கள் அடித்துள்ளார்.
Tags:    

Similar News