செய்திகள்
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

திருப்பூரில் அண்ணா பிறந்தநாள் விழா

Published On 2021-09-15 08:59 GMT   |   Update On 2021-09-15 09:51 GMT
தி.மு.க., அ.தி.மு.க.சார்பில் திருப்பூரில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர்:

அண்ணா பிறந்தநாளையொட்டி திருப்பூரில் தி.மு.க ., சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே. டி., நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவ படத்திற்கு முன்னாள் துணை சபாநாயகரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கே.எஸ்.,விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News