லைஃப்ஸ்டைல்
அறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்

அறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்

Published On 2019-07-20 05:11 GMT   |   Update On 2019-07-20 05:11 GMT
அறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இயற்கையான முறைக்கு மாறாக சில சூழல்களில் அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது.அறுவைசிகிச்சை பிரசவம் பல நன்மைகளைத் தந்தாலும், இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றி இன்று பெண்கள் தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.சுகப் பிரசவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதனால் ஏற்படும் பிரச்சனைகளும், உபாதைகளும் நிச்சயம் அதிகமே. அதனால் இந்த அறுவைசிகிச்சை பிரசவத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதனால் ஏற்பட உள்ள பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவது நல்லது.

புணர் புழை வாயிலாகப் பிறக்காமல் தாயின் கருப்பையிலிருந்து நேரடியாக அறுவைசிகிச்சை மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன. இதையே அறுவைசிகிச்சை பிரசவம் என்று கூறுகின்றோம்.

தற்போது அறுவை சிகிச்சை பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், அறுவைசிகிச்சை பிரசவத்தை சில சமயங்களில் கருவுற்றிருக்கும் சில தாய்மார்கள் தாங்களாகவே முன் வந்து தேர்ந்து எடுக்கின்றனர். வேறு சமயங்களில் சிகிச்சை தரும் மருத்துவர்களால் சில மருத்துவ காரணங்களை முன்னிட்டு இந்த சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படுகிறது. எனினும் இதனால் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் உடல் நலமும் காக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள் ஆகும். அதாவது தாய் அல்லது சேய்க்கு மருத்துவ அவசர உதவி வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது இந்த அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், இதனால் உடல் ரீதியான பல உபாதைகளும் பிரச்சனைகளும் நாளடைவில் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது

அறுவைசிகிச்சை பிரசவத்தின் போது முதலில் வால் பகுதி தண்டுவடம் அல்லது முதுகுத் தண்டில் மயக்க மருந்து செலுத்தப்படுகிறது. இந்த முறையில் தாய்க்கு முழுமையான மயக்க மருந்தும் தரப்படுகிறது. சில சமயங்களில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படுகிறது. இதனால் அந்த இடம் மரத்துப் போய் வலியை உணருவதில்லை. தாய்க்குச் சுயநினைவு இருந்தபடியே இருக்கும்.



இந்த அறுவைசிகிச்சை முறையில் தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதி வெட்டப்படுகிறது. அதனால் வயிற்றுத் தசைகள் பிரிக்கப்படுகிறது. பின்னர் கருப்பையில் கீறல் போடப்படுகிறது. இதனால் கருப்பையைத் திறக்கலாம். அதன் பின் தொப்புள் தண்டு வெட்டப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. அதன் பின் கர்ப்பப்பையில் தையல் போடப்படுகிறது. இந்த அறுவைசிகிச்சை சுமார் 20 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது

அறுவைசிகிச்சை பிரசவம் நிச்சயம் சில பிரச்சனைகள் நிறைந்தது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதனால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும்,

அறுவைசிகிச்சை செய்யும் போது நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதிக இரத்த போக்கு தாய்க்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்பப்பை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீண்டும் தாய் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

கால்களில் இரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தாய் அதிக கவனத்தோடும் இருக்க வேண்டிய சூழல் இருக்கும்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவது தனி நபரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து நடக்கும். எனினும், பொதுவாக இந்த முறை சிகிச்சையில் உடல் முன்னேற்றம் பெற சுகப்பிரசவத்தை விட அதிக நாட்கள் எடுக்கும்.
Tags:    

Similar News