செய்திகள்
மருத்துவ முகாம்

பரமக்குடி அருகே இலவச மருத்துவ முகாம்

Published On 2021-02-20 15:24 GMT   |   Update On 2021-02-20 15:24 GMT
பரமக்குடி காவல் துறை, அரசு போக்குவரத்து கழகம், பரமக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.
பரமக்குடி:

பரமக்குடி காவல் துறை, அரசு போக்குவரத்து கழகம், பரமக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது. முகாமிற்கு கிளை மேலாளர் பத்மகுமார் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முதன்மை உதவி ஆளுநர் சாதிக் அலி, முன்னாள் தலைவர் கோவிந்தராஜ். போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் சிவகார்த்திகேயன், லிபின் ஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் பேசினார். துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் மருத்துவ முகாமை ெதாடங்கி வைத்தார். இதில் கண் குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிங்கார பூபதி, பிரபாகரன், ராஜன், சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை அய்யப்பன் செய்திருந்தார்.
Tags:    

Similar News