செய்திகள்
சன்சத் தொலைக்காட்சி திறப்பு

சன்சத் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Published On 2021-09-15 13:36 GMT   |   Update On 2021-09-15 13:36 GMT
சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
பிரதமர் மோடி, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து சன்சத் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தனர்.

நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டு சன்சத் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

சன்சத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள்/ கொள்கைகளின் அமலாக்கம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள்/ நலன்கள்/ பிரச்சினைகள் ஆகிய முக்கியமான நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும். சர்வதேச ஜனநாயக தினமான இன்று  இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



சன்சத் தொலைக்காட்சியை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசுகையில் ‘‘இன்று சர்வதேச ஜனநாயக நாள். இன்றைய தினம் சன்சத் தொலைக்காட்சியை திறந்து வைப்பது பொருத்தமானது. நமக்கு ஜனநாயகம் என்பது வெறும் அரசியலமைப்பு மட்டுமல்ல. ஆத்மா. ஜீவன் தாரா’’ என்றார்.
Tags:    

Similar News