செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

தேர்தல் பணியாற்றும் மண்டல அலுவலர்களுக்கு வாகன வசதி

Published On 2021-04-05 05:04 GMT   |   Update On 2021-04-05 08:20 GMT
வாக்குப்பதிவு நாளை நடைபெற இருப்பதால், மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கு வாகன வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்ற 45 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்டல அலுவலர்களுக்கு குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகளை கண்காணிக்க பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கு வாகன வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வாடகை கார் உரிமையாளர்களை திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த கார்களை அனைவரும் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு மற்றும் பழைய கோர்ட்டு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர். மொத்தம் 45 மண்டல அலுவலர்களுக்கு 45 கார்கள் என வாடகை கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.
Tags:    

Similar News