உள்ளூர் செய்திகள்
கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஊசுடு அணிக்கு மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பரிசு வழங்கினார்.

புதுவையில் மாநில அளவிலான கபடி போட்டி ஊசுடு அணி சாம்பியன் மத்திய மந்திரி ரூ.3 லட்சம் ரொக்க பரிசு வழங்கினார்

Published On 2022-01-12 04:16 GMT   |   Update On 2022-01-12 04:16 GMT
புதுவையில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் ஊசுடு அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதில் மத்திய மந்திரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு ரூ.3 லட்சம் ரொக்க பரிசு வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை பா.ஜனதா சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இதன் ஒருபகுதியாக லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த 9-&ந் தேதி தொடங்கி நடந்தது. 

இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டன. இறுதிப் போட்டி நடந்தது. 

ஆண்கள் பிரிவில் ஊசுடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. 

விழாவில் மத்திய மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்சள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், கல்யாணசுந்தரம், சிவசங்கர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

முதல் பரிசு பெற்ற ஊசுடு அணிக்கு ரூ.3 லட்சம் ரொக்க தொகை மற்றும் பரிசு கோப்பை  வழங்கப்பட்டது. 2-&வது பரிசு பெற்ற உழவர்கரை  அணிக்கு ரூ.1Ñ லட்சம், 3-&வது பரிசு  பெற்ற காலாப்பட்டு அணிக்கு ரூ.1 லட்சம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது-

பெண்கள் பிரிவில் லாஸ்பேட்டை அணி முதல் பரிசு பெற்றது. அந்த அணிக்கு ரூ.50ஆயிரம் ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது-. 2-&வது பரிசு பெற்ற மண்ணாடிப்பட்டு அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-&வது பரிசு பெற்ற அரியாங்குப்பம் அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News