செய்திகள்
தங்க நகை திருட்டு

கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு

Published On 2019-11-19 17:51 GMT   |   Update On 2019-11-19 17:51 GMT
பேரணாம்பட்டு கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு டவுன் வீ.கோட்டா ரோட்டில் வேதவல்லி உடனுறை வேம்புலீஸ்வரர் கோவில் மஹாகும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.

நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் கர்ப்பக கிரஹ விமானத்தின் மேலிருந்து கலச நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்படடது.

அப்போது கூட்ட நெரிசலில் பேரணாம்பட்டு டவுன் திரு.வி.க.நகர் பாண்டியன் வீதியை சேர்ந்த ராஜேஸ்வரி (60) என்பவர் அணிந்திருந்த  சுமார் 5ஷி பவுன் தங்க செயின் மற்றும் பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (50) தபால்அலுவலக ஊழியர் அணிந்திருந்த சுமார் 2ஷி பவுன் எடையுள்ள தங்க செயின்  ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக பறித்து சென்றனர்.

கழுத்திலிருந்த தங்க செயின்கள் காணாமல் போனதை கண்ட 2 பெண் களும்  அதிர்ச்சி யடைந்தனர்.    இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி ட்ரோன் கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து கோவில் கும்பாபிஷேக விழாவில் தங்க நகைகள் பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News